KL2017 : தங்கத்தை நோக்கி
KL2017 சீ விளையாட்டு போட்டியில் மலேசிய அணியின் வெற்றியில் பினாங்கு பெருமை கொள்கின்றது
கம்பேஸ்வரன் மோகனராஜா, வயது 18, ஜோர்ஜ்டவுன்-இல் வளர்ந்தவர். பூலாவ் தீக்கூஸ் புனித சேவியர் பள்ளியில் கல்வி பயில தொடங்கி, ஜோர்ஜ்டவுன் புனித சேவியர் நிலையத்தில் கல்வியை தொடர்ந்தார்.
கம்பேஸ்வரன், 2016 சுக்மா விளையாட்டு போட்டியில், அம்பேய்தல் பிரிவில் பினாங்கு மாநிலத்தை பிரதிநிதித்து, தங்கம் வென்றார்.
KL2017 இவரின் முதல் சீ விளையாட்டு போட்டியாகும். 17 ஆகஸ்ட் 2017 அன்று நடந்த குழு பிரிவு அம்பேய்தல் போட்டியில், கம்பேஸ்வரன் பங்கேற்ற குழு தங்கம் ???? வென்றது. வாழ்த்துக்கள்! தங்கத்தை நோக்கி!
KL2017-இல் பங்கேற்றிருக்கும் கம்பேஸ்வரனுக்கும், அவரின் குழுவினருக்கும் நமது வாழ்த்துக்கள்.
இவ்வாண்டு சீ விளையாட்டு போட்டியில், 54 பினாங்கு விளையாட்டு வீரர்கள் மலேசியாவை பிரதிநிதிக்கின்றனர். ????????????????????????
#தங்கத்தைநோக்கி #பினாங்கை❤நேசிக்கின்றேன் #மலேசியாவை❤நேசிக்கின்றேன்